சப்தரிஷி ஜோதிட அறிவியல் பயிற்சி & ஆராய்ச்சி மையம்

சப்தரிஷி ஜோதிட அறிவியல் பயிற்சி & ஆராய்ச்சி மையம் இந்தியாவின் முதன்மையான முன்னோடியான ஜோதிட பயிற்சி மையமாகும். இம் மையமானது 2001ஆம் துவக்கப்பட்டு 2005ஆம் ஆண்டு முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஜோதிட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஜோதிட பயிற்சி மையத்தின் நிறுவனர் தலைவர் திரு.Dr.K.R. சுப்பிரமணியன் 2003ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஜோதிடவியல் பட்டய படிப்புக்கு கௌரவ ஆசிரியராக பணிபுரிந்தார், 2006ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை ஜோதிடவியல் துறையின் பொறுப்பாசிரியாராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணியாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஜோதிடவியல் பட்டயப் படிப்பின் பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையிலும் தரம் மேம்படுத்தியும் எழுதி ஜோதிடவியல் படிப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஆவன செய்ய வழி வகுத்தார். 2009ம் ஆண்டு முதலாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் நிறுவனர் தலைவரின் பொறுப்பில் SASTRA ஜோதிடவியல் படிப்புகளை வழங்கி வருகிறது.  ஜோதிட ஆர்வலர்கள் பலராலும் விரும்பப்படும் ஜோதிட பயிற்சி&ஆராய்ச்சி நிறுவனமாக SASTRA இருக்கிறது. முக்காலத்தையும் அறிய வழி கூறும் சித்தர்களின் கலையாம் தெய்வீகக்கலையான ஜோதிடக்கலையை தொலைநிலைக் கல்வி வாயிலாக கற்றுத் தேறுவது என்பது மிகவும் கடினம் என்றாலும் நிறுவனர் தலைவர் திரு.Dr.K.R. சுப்பிரமணியன் அவர்கள் பல மூலநூல்களில் இருந்து தொகுத்து எழுதிய பாடப் புத்தகங்களைப் படிக்கும் பொழுதும் பாடம் நடத்தும் விதத்தைக் காணும் பொழுதும் ஜோதிடம் கற்பது மிகவும் எளிது என்று மாணவர்களின் மதிப்பு மிக்க கருத்தாகும்.  திரு.Dr.K.R. சுப்பிரமணியன் அவர்களின் வகுப்பில் பயின்ற பிறகு தான் ஜோதிடத்தின் மூல நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு உண்மையான விளக்கங்களை பலரால் அறிய முடிந்தது என்பது ஜோதிடவியல் வகுப்பில் பயிலும் மாணவர்களின் மேலான கருத்தாகும்.    ஜோதிடவியலின் ஒவ்வொரு கருத்தும் பசுமரத்தாணி போன்று மாணவர்களாகிய நெஞ்சில் பதியும்படி வகுப்பு நடத்துவதில் திரு.Dr.K.R. சுப்பிரமணியன் வல்லுநர் ஆவார்.


ஜோதிடம் தொடர்பாக பல முனிவர்கள் ரிஷிகள் ஏட்டுச் சுவடிகளில் எழுதி வைத்தவைகள் ஏராளம், அவைகளில் பெரும்பாலானவை தற்காலத்தில் புத்தகங்களாக வெளிவந்துவிட்டன. எல்லாவகையான படிப்புகளும் அனைத்து பல்கலைக்கழகத்திலும் பட்டப்படிப்பு வகையில் கற்பிக்கப்படுகின்றன, ஆனால் ஜோதிடவியல் எந்த பல்கலைக்கழகத்திலும் அங்கீகரிக்கப்பட்டு ஆரம்பிக்கப்படவில்லை. நம் ஜோதிடப் பேராசிரியர் திரு.Dr.K.R. சுப்பிரமணியன் அவர்கள் அரும்பாடுபட்டு கடுமையாக உழைத்து உலகத் தரத்தில் ஜோதிடவியல் பாடத்திட்டங்களை தயாரித்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று ஜோதிடவியலில் முதுகலை பட்டப்படிப்பு, இளங்கலைபட்டப்படிப்பு, பட்டமேல் பட்டயப்படிப்பு, உயர் பட்டயப்படிப்பு, பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்பு மற்றும் வாஸ்து சாஸ்திரம் பட்டயப்படிப்பு ஆகியவற்றை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வழங்கி வருகிறார். மேற்கண்ட படிப்புகளில் நம் இந்திய தேசம் முழுவதிலிருமிருந்து மாணவர்கள் சேர்க்கைப் பெற்று பயன் அடைந்து வருகின்றனர். மேலும் நம் நாட்டு ஜோதிடவியலின் புகழினை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். இந்திய ஜோதிடவியல் வரலாற்றிலேயே ஜோதிடம் தொடர்பாக வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வுக் கட்டுரை சமர்பித்து சிறப்புறையாற்றிய பெருமைக்குரிய ஒரே ஜோதிடப் பேராசிரியர் நம் பேராசிரியர் மட்டுமே ஆவார்.


தற்சமயம் பல ஜோதிட ஆர்வலர்களின் விருப்பப்படி ஆன்லைன் வகுப்புகள் வீடியோ வடிவில் வழங்கப்படுகின்றன இவ்வகை ஆன்லைன் வகுப்புகள் நேரடி வகுப்பில் அமர்ந்து படிப்பது போன்ற உணர்வு ஏற்படும் வகையில் அமைந்துள்ளன.
அனைத்து வகுப்புகளுக்கும் Material வழங்கப்படும்.
விபரங்களுக்கு 90257 90247 தொடர்பு கொள்ள வேண்டும்.
 
மிகத் தரமான ஜோதிடப் பயிற்சி!  நியாயமான கட்டணம்!!

Registered under Ministry of MSME, Government of India
Registration Number: UDYAM - TN - 12 - 0002541
An ISO Certified Institution.
Registration Number: 2568/TL - Q/041220